Paristamil Navigation Paristamil advert login

Sevran : இளைஞன் சுட்டுக்கொலை

Sevran : இளைஞன் சுட்டுக்கொலை

11 புரட்டாசி 2023 திங்கள் 13:08 | பார்வைகள் : 6780


93 ஆம் மாவட்டத்தின் Sevran நகரில் இளைஞன் ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி அளவில் காவல்துறையினருக்குகிடைத்த தகவலை அடுத்து, சம்பவம் இடம்பெற்ற Beaudottes பகுதிக்கு விரைந்துசென்றனர். அங்கு இளைஞன் ஒருவன் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி கீழேவிழுந்து கிடந்துள்ளான். 

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றடையும் முன்னரே குறித்த இளைஞன்பலியானதாகவும், மூக்கு மற்றும் நெற்றியில் என இரு இடங்களில்சுடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

19 வயதுடைய இளைஞனே கொல்லப்பட்டதாக விசாரணைகளைமேற்கொண்டுவரும் Sevran நகர காவல்துறையினர் தெரிவித்தனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்