பிரான்ஸ் சுகாதார அமைச்சு பாரிய இரண்டு மதுவிலக்கு பிரச்சாரத்தை ஏன் கைவிட்டது?
11 புரட்டாசி 2023 திங்கள் 14:02 | பார்வைகள் : 7432
கடந்த வசந்த காலத்தில் பிரான்ஸ் சுகாதார அமைச்சு மதுவிலக்கு பிரச்சாரத்தை ஆரம்பிக்க பெரும் எடுப்பிலான வேலைத் திட்டங்களை ஆரம்பித்தது.
"இரண்டு குவளைகள் நாள் ஒன்றுக்கு, அதுவும் ஒவ்வொரு நாளும் அல்ல" மற்றும் "மது அருந்துதல் உடல் நலத்துக்குக் கேடு " எனும் இரு தலைப்புகளின் கீழ் குறித்த பிரச்சாரத்தை ஆரம்பிக்க திட்டமிட்டது. குறித்த வேலைத்திட்டத்தை, மருத்துவர்கள், மதுவிலக்கு ஆதரவாளர்கள், மருத்துவ காப்பீட்டு அமைப்புக்கள், பொது மக்கள் என பலரும் வரவேற்று இருந்தனர்.
இந்த நிலையில் சுகாதார அமைச்சு இரண்டு பிரச்சார வேலைத்திட்டத்தினையும் திடீரென கைவிட்டுள்ளது.
காரணம் பிரான்சில் இவ்வாண்டு உலகக் கோப்பைக்கான rugby விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது, இதன் போது ரசிகர்கள் மதுபானச் சாலைகளில் மது அருந்தியபடி போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பார்கள். அந்த தருணத்தில் மதுவிலக்கு பிரச்சாரம் அவர்களுக்கு நெருடலாக இருக்கும் எனவும், கோடைகால விடுமுறை முடிந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு என கொண்டாட்ட காலம் நெருங்கும் போது தங்கள் விற்பனை மந்தமாகவே இருக்கும் எனவும், அதன் ஏற்பாட்டாளர்கள் வேண்டுதல் விடுத்த நிலையிலேயே மதுவிலக்கு பிரச்சாரத்தை நிறுத்தி உள்ளதாக தெரியவருகிறது.
இந்த பிரச்சாரத்தை நிறுத்திய அரசு மீது பலதரப்பட்ட நிலைகளில் உள்ளவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.
"அரசு வியாபாரிகள் தரும் வரிகளுக்கானது.
மக்களுக்கானது அல்ல" என ஊடகங்களில் அவர்கள் தெரிவித்துள்ளனர்