ஊக்கமருந்தால் பிரான்சின் உதைபந்தாட்ட வீரரிற்குத் தடை!!

11 புரட்டாசி 2023 திங்கள் 19:26 | பார்வைகள் : 14031
பிரான்சின் தேசிய உதைபந்தாட்ட அணியின் பிரபல பந்தாட்ட வீரரான போல் பொக்போ (Paul Pogba) லீக் அணிகளிலும் விளையாடத் தடைவிதிக்கப்பட்டுள்ளார்.
ஜுவென்துஸ் தூரன் (Juventus Turin) அணிக்கு விளையாடும் போல் பொக்பா கடந்த ஓகஸ்ட் மாதம் செய்த சோதனையில் Testostérone எனும் ஊக்க மருந்து உபயோகித்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Testostérone எனும் ஊக்கமருந்து உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவ சிகிச்சையின் காரணமாக இது உபயோகிப்பது அனுமதிக்கப்பட்டிருந்தாலும் போல் பொக்பா சட்டவிரோதமாகவே இதனை உபயோகித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த நான்காண்டுகள் இவர் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்படும் என தீர்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1