போர்ச்சுக்கல் நாட்டில் நதியாய் ஓடிய சிவப்பு ஒயின்
12 புரட்டாசி 2023 செவ்வாய் 08:47 | பார்வைகள் : 2233
போர்ச்சுக்கல் நகரின் சாலையில் சிவப்பு ஒயின் மதுபானம் நதியாக ஓடிய காட்சி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை போர்ச்சுக்கல் நாட்டின் சாவோ லூரென்கோ டி பாரோ(Sao Lourenco de Barro) நகரின் தெருக்களில் சிவப்பு ஒயின் நதி போல் ஓடிய காட்சிகள் இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மில்லியன் லிட்டர் அளவிலான ஒயின் நகரின் செங்குத்தான பகுதியில் இருந்து கீழ் நோக்கி சாலையின் தெருக்களில் வழிந்தோடியதை பார்த்த மக்கள் வியப்பில் மூழ்கி நின்றனர்.
டிஸ்டில்லரி நகரில் 2 மில்லியன் லிட்டர் ஒயின் பீப்பாய்களை உள்ளடக்கி வைத்து இருந்த தொட்டிகளில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த ஒயின் ஆறானது ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
சாலையில் ஓடிய சிவப்பு ஒயினை கொண்டு ஒலிம்பிக் நீச்சல் குளத்தை நிரப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையில் ஓடிய சிவப்பு ஒயின் அருகில் உள்ள ஆற்றில் கலப்பதற்கான சாத்தியக்கூறுகள் எழுந்து இருப்பதால் சுற்றுச்சூழல் எச்சரிக்கையையும் எழுப்பப்பட்டுள்ளது.
அதே சமயம் தீயணைப்பு படையினர் சிவப்பு ஒயின் செர்டிமா நதியில் கலப்பதற்கு முன் அதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் லெவிரா டிஸ்டில்லரி இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
அத்துடன் சேதத்தை சரி செய்யவும், சுத்தப்படுத்தவும் தேவையான அனைத்து செலவுகளையும் முழுமையாக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.