Paristamil Navigation Paristamil advert login

நான்கு வயது சிறுமி நித்திரையிலேயே உயிரிழப்பு

நான்கு வயது சிறுமி நித்திரையிலேயே உயிரிழப்பு

12 புரட்டாசி 2023 செவ்வாய் 09:35 | பார்வைகள் : 7850


ஹொரனை பகுதியில் நித்திரையின் போது நான்கு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். 
 
வழமையைபோன்று சிறுமி நித்திரையிலிருந்துள்ளார். இதன்போது சிறுமி சிறுநீர் கழித்தமையினால் அவருக்கு மாற்றுடை அணிவதற்காக தாய் சிறுமியை நித்திரையிலிருந்து விழிக்க செய்துள்ளார். 
 
எனினும் சிறுமி விழிக்காமல் நித்திரையில் காணப்பட்டதுடன், உடல் குளிர்மையடைந்திருந்துள்ளது. 
 
சிறுமியின் நிலைமை குறித்து கணவரிடம் அறிவித்தமையை அடுத்து ஹொரண ஆதார வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
சிறுமிக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். 
 
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்