நேட்டோ ராணுவ வீரர்களின் பிரம்மாண்ட போர் ஒத்திகை

12 புரட்டாசி 2023 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 9693
நேட்டோ பனிப்போருக்கு பிறகு அடுத்த ஆண்டு மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சியை மேற்கொள்ள இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஆரம்பித்ததில் இருந்தே மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது.
நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகள் ஒருபக்கம் ரஷ்யாவிற்கு எதிராக நிற்கிறது.
சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் மட்டும் ரஷ்யாவிற்கு ஒருவித மறைமுக ஆதரவை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பனிப்போருக்கு பிறகு பிரம்மாண்டமான போர் பயிற்சியை அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ கூட்டமைப்பு அடுத்த ஆண்டு நடத்த இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த போர் பயிற்சியில் ஸ்வீடன் உட்பட நேட்டோ நாடுகளை சேர்ந்த மொத்தம் 41,000 ராணுவ வீரர்கள் பங்கேற்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த போர் பயிற்சியானது ஜேர்மனி,போலந்து மற்றும் பால்டிக் நாடுகளில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.
ரஷ்ய அத்துமீறல்களை எதிர்கொள்வதே போர் பயிற்சியின் முக்கிய நோக்கம் என பைனான்சியல் டைம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த போர் பயிற்சியின் போது புவியியல் தரவுகளை துல்லியமாக பயன்படுத்தி யதார்த்தமான காட்சிகளை உருவாக்க முயற்சிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1