எலான் மஸ்கின் அதிரடி திட்டம்!
12 புரட்டாசி 2023 செவ்வாய் 10:36 | பார்வைகள் : 7556
மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்வதற்காக விண்கலம் ஒன்று தயாராகவுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கியுள்ளது.
இந்த விண்கலமானது மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலமானது 120 டன் எடையும் 25 முதல் 30 மாடி உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக சக்தி வாய்ந்த டிராகன் பூஸ்டர்ஸ் ராக்கெட் மூலம், இந்த விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.
இந்நிலையில் அனைத்து சோதனைகளிலும் வெற்றப்பெற்ற நிலையில், ஸ்பேக் எக்ஸ் ராக்கெட் ஏவுதளத்தில் விண்கலம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க விண்வெளி துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறது. அனுமதி கிடைத்தவுடன் இந்த விண்கலமானது புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan