தளபதி 68 பட ஹீரோயின் சினேகாவா?

12 புரட்டாசி 2023 செவ்வாய் 14:59 | பார்வைகள் : 6480
விஜய் தன்னுடைய 68 ஆவது படத்தை, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை விஜய்யின் 'பிகில்' படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. அதேபோல், இந்த படத்திற்கு வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே இசைக்கு ஆஜராகிவிடும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகளும் தற்போது விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் முதல் கட்ட பணிக்காக விஜய் அமெரிக்கா சென்ற போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார். மேலும் இது குறித்து வெளியான தகவலில் விஜயின் இளம் வயது கதாபாத்திரத்துக்காக, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதற்கான லுக் டெஸ்ட் நடந்ததாகவும் கூறப்பட்டது. அதே போல் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதேபோல் விஜய்யுடன் இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகியோர் நடித்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இந்த தகவலை உறுதி செய்வது போல் வெங்கட் பிரபு புன்னகை அரசி சினேகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இதை பார்த்து ரசிகர்கள் பலர் சினேகா தளபதிக்கு ஜோடியாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என நினைத்த நிலையில், இந்த படம் வேறு ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. சினேகா மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணைந்து நடிக்கும், ஷாட் பூட் த்ரீ படத்தின் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்டதாம், நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் - சினேகா ஜோடியை திரையில் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள் கண்டிப்பாக இந்த ட்விஸ்டை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!!