ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி விவகாரம் தொடர்பில் அதிரடி நடவடிக்கை..!

12 புரட்டாசி 2023 செவ்வாய் 15:09 | பார்வைகள் : 7408
இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் ’மறக்குமா நெஞ்சம்’ என்ற நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் செய்த சொதப்பல் காரணமாக டிக்கெட் வாங்கிய பலர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் தமிழக அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி காரணமாக சென்னையில் இரண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
சென்னை பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு ஆணையர் தீபா சத்யன் என்பவரும் சென்னை கிழக்கு சட்டமூலங்கு இணை ஆணையர் திஷா மிட்டல் என்பவரும் காத்திருப்பு பட்டியலுக்கு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யாமல் இருந்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியை சரியாக திட்டமிடாமல் நடத்திய ஒருங்கிணைப்பாளர்களால் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.