Vincennes : தீ விபத்து காரணமாக பாடசாலையில் இருந்து 1,500 மாணவர்கள்வெளியேற்றம்

12 புரட்டாசி 2023 செவ்வாய் 16:16 | பார்வைகள் : 13342
பாடசாலை ஒன்றின் அருகே உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்துகாரணமாக 1,500 மாணவர்கள் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
நேற்று திங்கட்கிழமை நண்பகல் இச்சம்பவம் Vincennes நகரில்இடம்பெற்றுள்ளது. Notre-Dame de la Providence பாடசாலைக்கு அருகே உள்ளகட்டிடத்தில் திடீரென தீ பரவியது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். பாடசாலைக்கு மிக அருகில் உள்ள கட்டிடம் என்பதால் முன்னெச்சரிக்கைகாரணமாக பாடசாலையில் உள்ள மாணவர்கள் வெளியேற பணிக்கப்பட்டனர்.
இதனால் மொத்தமாக 1,500 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைஊழியர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்ப்ட்டனர்.
தீயணைப்பு படையினர் மிக விரைவாக செயற்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், இன்று செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் பாடசாலை ஆரம்பித்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1