Paristamil Navigation Paristamil advert login

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு ஆசைக்காட்டி ஏமாற்றிய கும்பல்

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு ஆசைக்காட்டி ஏமாற்றிய கும்பல்

12 ஆடி 2023 புதன் 01:52 | பார்வைகள் : 3992


குகுருநாகல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கடந்த 8 ஆம் திகதி சுற்றிவளைப்பை இந்த மேற்கொண்டு அதன் உரிமையாளரைக் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல், பௌத்தலோக மாவத்தை, சிறிபதி கட்டிடத்தில் இந்த போலி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தப்பட்டு, அதன் மூலம் குவைத், துபாய், மாலைதீவு, ருமேனியா, கத்தார், செர்பியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டிருந்தன.

இந்த மோசடிச் செயல் தொடர்பில் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், இந்த நிறுவனத்தை நடத்தி வந்த நபர் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த இடத்திலிருந்து 05 கடவுச்சீட்டுகள், கடவுச்சீட்டு நகல்களுடன் கூடிய ஆவணம், இரப்பர் முத்திரைகள், அடையாள அட்டைகள் மற்றும் ஏராளமான வேலை வாய்பு விண்ணப்பங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு அவரை 05 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து, எதிர்வரும் 28 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கான உத்தரவை நீதவான் பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலைகளைப் பெறுவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று, வெளிநாட்டு வேலைகளுக்கு பணியமர்த்துவதற்கு முகவர் நிலையங்களுக்கு சரியான உரிமம் உள்ளதா? மற்றும் அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட வேலையைப் பெற்றுள்ளதா? என்பதைக் கண்டறியவும்.

அது ஒரு செல்லுபடியாகும் வேலைவாய்ப்பு நிறுவனமாக இருந்தால் அதில் பதிவு செய்யுங்கள்.

அதேநேரம் 1989 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்