குழந்தைகளுக்கு (bronchiolite) மூச்சுக்குழாய் அழற்சிக்கு எதிரான தடுப்பூசி அறிமுகம்.

15 புரட்டாசி 2023 வெள்ளி 17:59 | பார்வைகள் : 8496
இதுவரை காலமும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைக்கு ஏற்படும் (bronchiolite) மூச்சுக் குழாய் அழற்சி நோய்க்கு எதிரான தடுப்பு ஊசி Beyfortus - Sanofi மற்றும் Astrazeneca ஆய்வகங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த நோய் சிறு குழந்தைகளை தாக்கும் போது சிலவேளைகளில் பாரதூரமன நிலைகளை ஏற்படுத்துவதும் உண்டு. கடந்த வருடம் மட்டும் (bronchiolite) மூச்சுக்குழாய் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குளிர் காலத்தில் 45.000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
பிரான்ஸ் மருத்துவத்துறை குறித்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கிறது. குழந்தைகள் மருத்துவ நிபுணர் Anne-Sophie Trentesaux குறிப்பிடும் போது.
"குறித்த தடுப்பூசி குளிர்காலங்களில் ஏற்படும் எல்லா நோய்களையும் தடுக்கும் தடுப்பூசியாக அமையாது ஆனால் (bronchiolite) மூச்சுக்குழாய் அழற்சிக்கு இந்த தடுப்பூசி சிறந்த நிவாரணமாக இருக்கும். இது கட்டாயமானது அல்ல ஆனால் குழந்தைகளுக்கு சிறந்த நிவாரணம் " எனத் தெரிவித்துள்ளார்.