Paristamil Navigation Paristamil advert login

தேர்தலில் மக்கள் பழி தீர்ப்பார்கள் ! மல்லிகார்ஜுன கார்கே

தேர்தலில் மக்கள் பழி தீர்ப்பார்கள் !  மல்லிகார்ஜுன கார்கே

16 புரட்டாசி 2023 சனி 07:55 | பார்வைகள் : 3813


20 சதவீத ஏழைகள், விலைவாசி உயர்வால் 7.2 சதவீதம் முதல் 7.6 சதவீத பணவீக்கத்தை சந்தித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாட்டில் உணவு பொருட்களின் விலை, விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. 

மோடி அரசின் 'கொள்ளை' காரணமாக, 20 சதவீத ஏழைகள், நாள்தோறும் விலைவாசி உயர்வின் அதிகபட்ச சுமையை தாங்கி வருகிறார்கள்.

20 சதவீத ஏழைகள், விலைவாசி உயர்வால் 7.2 சதவீதம் முதல் 7.6 சதவீத பணவீக்கத்தை சந்தித்து வருகிறார்கள். 20 சதவீத பணக்காரர்கள், 6.7 சதவீத பணவீக்கத்தை சந்தித்து வருகிறார்கள். 

பிரதமர் மோடி, இந்த பிரச்சினை, அந்த பிரச்சினை என்று பேசி வருகிறார். 

ஆனால், உண்மையான பிரச்சினையான விலைவாசி உயர்வு பற்றி பேசுவது இல்லை. உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர் மக்களின் கவனத்தை திசைதிருப்பக்கூடாது.

விலைவாசியை குறைப்பதில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம் மக்களின் பாதிப்பு முடிவுக்கு வரும். மக்கள் தங்கள் சிரமங்களுக்கு பா.ஜனதாவே காரணம் என்பதை புரிந்து கொண்டு விட்டனர். 

வரவிருக்கும் தேர்தல்களில், பா.ஜனதாவுக்கு பாடம் புகட்டி, அதன் 'கொள்ளை'க்கு நிச்சயம் பழி தீர்ப்பார்கள். பணவீக்க பிரச்சினையில், பாரதம் வெல்லும், 'இந்தியா' வெல்லும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்