Paristamil Navigation Paristamil advert login

World Cleanup Day' உலக துப்பரவு தின பாரிய ஏற்பாடுகள் சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைப்பு.

World Cleanup Day' உலக துப்பரவு தின பாரிய ஏற்பாடுகள் சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைப்பு.

16 புரட்டாசி 2023 சனி 06:42 | பார்வைகள் : 1314


இன்று Septembre 16ம் திகதி உலக துப்பரவு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. கடலை, தரையை நஞ்சாக்கி உயிர்கள் பலியாகக் காரணமாக அமையும், வீசி எறியப்படும் குப்பைகளை அகற்றி உலகைத் துப்பரவாக்கும் தினமாக (ONG)  அரச சார்பற்ற நிறுவனங்கள் கடந்த 2008 Septembre 16ம் திகதி முதல் ஒவ்வொரு ஆண்டும் இன் நாளில் கடைப்பிடிக்கப்படு வருகிறது.

இவ்வாண்டு பிரான்சில்  Bouches-du-Rhône,  Var, மற்றும் Alpes-Maritimes பகுதிகளில், உலக துப்பரவு தினத்தில் குப்பைகளை சேகரிக்கும் பாரிய ஏற்பாடுகள் அரச சார்பற்ற அமைப்புக்களால் ஏற்பாடும் செய்யப்பட்டது. ஆனால் இன்று குறித்த பகுதிகளில் புயலுடன் கூடிய மழை என பிரான்ஸ் காலநிலை அவதான மையம் அறிவித்ததை அடுத்து; இன்றைய ஏற்பாடுகள் எதிர் வரும் Septembre 30ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என அரச சார்பற்ற அமைப்புக்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த ஏற்பாட்டாளர்களில் ஒருவரான Julien.
"இதந்தகைய நிகழ்வுகள் மிகப்பெரிய முன்னுதாரணங்கள். நாங்கள் எல்லோரும் இந்த பூமியை துப்பரவாக வைத்திருக்க வேண்டும். Septembre 16ம் திகதி என்பது ஒரு அடையாள தினம் தான், நாங்கள் வாழ்நாள் முழுவதும் துப்பரவாக வைத்திருக்க எங்களின் பிள்ளைகளுக்கும் கற்றுத்தர வேண்டும் " என தெரிவிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்