Paristamil Navigation Paristamil advert login

"Fête de l'Humanité" எனும் மனிதநேய விழாவின் 88வது வருடாந்த விழா கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நாளை வரை நடைபெறுகிறது.

16 புரட்டாசி 2023 சனி 09:20 | பார்வைகள் : 2610


"Fête de l'Humanité" எனும் மனிதநேய விழாவின் 88வது வருடாந்த விழா கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நாளை வரை நடைபெறுகிறது.

"Fête de l'Huma" என அழைக்கப்படும் மனிதநேய விழா பிரான்சில் 1930ம் ஆண்டு, அன்று வெளிவந்த L'Humanité பத்திரிகையின் தலைமை ஆசிரியர் Marcel Cachin அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப் பட்டது.

கூடுதலாக கலை, பண்பாடு நிகழ்ச்சிகளாலும் ஒரு சில அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளளாலும் குறித்த விழா அன்று நிறைந்திருந்தது.

பின்னர் 1938 காலப் பகுதியில் கம்யுனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கத்தில் Fête de l'huma" சென்றபோது கலைநிகழ்ச்சிகளோடு கம்யுனிஸ்ட் சித்தார்த்த கருதுக்களை வாங்கியிருந்தது. 

1945ல் இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்தத ஆண்டில் குறித்த விழா மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர் என அதன் வரலாறு கூறுகிறது.

1970 களில், Fête de l'Humanity" மற்ற அரசியல் கட்சிககளின் கூட்டாக மாற்றப்பட்டது. இடதுசாரி பிரமுகர்கள், கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள். இணைந்து கொள்ள குறித்த விழா கலையோடு சேர்த்து அரசியல் அரங்கமாகவும் நிறம் மாறியது.

தொடர்ந்து 1999களில் தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள், பெண்கள் உரிமை அமைப்புகள் என கட்சிளுக்கு அப்பால் உள்ள அமைப்புக்கள் இனைந்து கொண்டு ஒரு மனிதநேய விழாவாக மேலும் சிறப்பு பெற்றது.

இவ்வாண்டுக்கான 'Fête de l'Humanity' விழா பரிசில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Essonne நகரில்  ஒரு பழைய விமான ஒடுதளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்று வருகிறது .70க்கும் அதிகமான கலைநிகழ்ச்சிகளோடு, அரசியல் விவாத அரங்குகள், அரசியல் கட்சிகளுக்களின் பிரமுகர்களின் உரைகள் என பல நிகழ்வுகள் நடைபெறுகிறது. சுமார் 400,000 மக்கள் இந்த மூன்று நாட்கள் நடைபெற்றும் விழாவில் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்