Paristamil Navigation Paristamil advert login

பிரான்சின் மீது கடுமையான பயங்கரவாதத் தாக்குதல்  - அல்-கைதா கடும் எச்சரிக்கை!!

பிரான்சின் மீது கடுமையான பயங்கரவாதத் தாக்குதல்  - அல்-கைதா கடும் எச்சரிக்கை!!

16 புரட்டாசி 2023 சனி 13:00 | பார்வைகள் : 5803


பிரான்ஸ் மீதும் அதன் அமைச்சர்கள் மீதும் கடுமையான பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்படும் என அல்-கைதாவின் அரபு தீபகற்பத்தின் பிரிவான AQPA (al-Qaida dans la péninsule arabique)  தனது அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் சஞ்சிகையான Sada al-Malahim இல் எச்சரித்துள்ளனர்.

பிரான்சுடன் சேர்த்து சுவீடனிற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியப் பயங்கரவாதிகள் மீது பிரான்சைத் தொடர்ந்து சுவீடனும் கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பதால், சுவீடனிற்கும் பிரெஞ்சு, மண்ணில் வைத்துத் தாக்குதல் நடாத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் பாடசாலைகளில் மதச்சார்பின்மையைப் பேணுவதற்காக, இஸ்லாமிய மொக்காடு ஆடையான அபயாவினைத் தடை செய்திருப்பதை எதிர்த்து, இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களைத் தொட்டால் பிரான்ஸ் அழிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

«பிரெஞ்சு அரசாங்கத்திpன் அமைசசர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பிரான்சில் உள்ள சுவீடன் தூதரகம் தரைமட்டமாக்கப்பட்டது. பல நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி விரைவில் சர்வதேச ஊடகங்களில் எதிரொலிக்கும்» என அல்கைதா இஸ்லாமியப் பயங்கரவாதிகள் எச்சரித்துத்துள்ளனர்.

செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் இருந்தே பிரான்சில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எச்சரிக்கை நிலையும் அதிகரிக்ப்படடுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்