Paristamil Navigation Paristamil advert login

எம்பாப்பேவின் அற்புதமாக  கோல்கள் - PSG அணி தோல்வி

எம்பாப்பேவின் அற்புதமாக  கோல்கள் - PSG அணி தோல்வி

16 புரட்டாசி 2023 சனி 09:56 | பார்வைகள் : 2275


லீக் 1 தொடரில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2-3 என்ற கோல் கணக்கில் நீஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

Parc des Princes மைதானத்தில் நடந்த லீக் 1 தொடரில் PSG - Nice அணிகள் மோதின. 

ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் Nice அணியின் டெர்ம் மொபி அபாரமாக கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து பதிலடியாக PSG நட்சத்திரம் எம்பாப்பே புயல்வேகத்தில் கோல் அடித்தார். 

இதன்மூலம் முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது. 

அதன் பின்னர் நடந்த இரண்டாம் பாதியில் Nice அணி ஆதிக்கம் செலுத்தியது. 

அந்த அணியின் லபோர்டே 53வது நிமிடத்தில் கோல் அடித்தார். 

அடுத்து 68வது நிமிடத்தில் மற்றொரு வீரரான மொபி தனது இரண்டாவது கோலை அடித்தார். 

பின்னர் ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் எம்பாப்பே அற்புதமாக கோல் அடித்தார். 

ஆனால் மேற்கொண்டு PSG அணியால் கோல் அடிக்க முடியாததால், Nice அணி 3-2 என்ற கோல் கணக்கில் PSGயை வீழ்த்தியது. 

பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியின் தோல்வி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. 

அத்துடன் எம்பாப்பே இரு கோல்கள் அடித்தும் தோல்வியடைந்ததால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்தத் தொடரின் புள்ளிப்பட்டியலில் PSG 2 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.   

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்