கொண்டைக்கடலை சுண்டல்
16 புரட்டாசி 2023 சனி 10:09 | பார்வைகள் : 3995
விநாயகர் சதுர்த்தியன்று அவருக்கு பிடித்த கொழுக்கட்டைக்கு அடுத்தபடியாக வைப்பது சுண்டல்தான். சுண்டல் இல்லாத விநாயகர் சதுர்த்தியே கிடையாது. அந்த வகையில் நீங்கள் எப்போதும் செய்யும் சுண்டல் ரெசிபியை விட ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க... ஒரு சுண்டல் கூட மிஞ்சாது. ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள்
வெள்ளை கொண்டைக் கடலை - ஒரு கப்
தேங்காய் - கால் கப்
எண்ணெய் - 1 ஸ்பூன்.
கருவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை :
கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
மறுநாள் கழுவி குக்கரில் போட்டு போதுமான நீர் மற்றும் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக விடவும்.
வெந்ததும் தண்ணீரை இறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொறிந்ததும், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து வதக்கி அதை கொண்டைக் கடலையில் சேர்த்து பிரட்டினால் சுண்டல் தயார்.