அறுபது லட்சம் லிட்டர் குடிநீரோடு பிரான்சில் இருந்து புறப்பட்டது கப்பல்.
16 புரட்டாசி 2023 சனி 10:37 | பார்வைகள் : 8413
பிரான்சின் கடல்கடந்த மாவட்டங்களில் ஒன்றான MAYOTTE கடந்த 25 ஆண்டுகளாக கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது.
வருடா வருடம் வறட்சியின் அளவும் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாண்டு குடிநீர்த் தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லீட்டர் குடிநீர் கிடைப்பதே பெரும் சவால் என்னும் நிலையே அங்கு நிலவுகிறது.
இந்த நிலையில் பிரான்சில் இருந்து அறுபது லட்சம் லிட்டர் குடிநீர் Mayotte நோக்கி இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை முதல் கட்டமாக மருத்துவ மனைகள், மூதாளர் இல்லங்கள், சிறுவர் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க படும் எனவும், அடுத்த கட்டமாக நோயாளர்கள், வயோதிபர்கள் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.