சுவிஸில் சாக்லேட் சாப்பிடுவது தொடர்பில் புதிய ஆய்வு
16 புரட்டாசி 2023 சனி 10:39 | பார்வைகள் : 5246
சாக்லேட் சாப்பிடுவது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.
சாக்லேட் சாப்பிடுவதை நிறுத்துவதால் உடல் நலத்திற்கு நன்மை ஏற்படாது என சுவிஸ் ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
சூரிச்சை மையமாகக் கொண்ட அறிவியலாளர்கள், atrial fibrillation என்னும் இதயப் பிரச்சினை கொண்ட 3,000 பேரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்கள்.
Atrial fibrillation என்பது சீரற்ற இதயத்துடிப்பாகும். அதாவது, சிலருக்கு, திடீரென இதயம் வேகமாகத் துடிக்கும், திடீரென மிக மெதுவாக துடிக்கும்.
இப்படி சீராக துடிக்காமல் வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ இதயம் துடிப்பதே மருத்துவத் துறையில் atrial fibrillation என அழைக்கப்படுகிறது.
இந்த பிரச்சினை உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆச்சரியப்படுத்தும் விளைவுகளை வெளிக்கொணர்ந்தன.
மிதமான அளவில் சாக்லேட் சாப்பிடுவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும், ஏன், மரண அபாயத்தையும் கூட குறைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாரத்திற்கு இரண்டு முதல் ஆறு சாக்லேட் பார்கள் சாப்பிடுவது மிக நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.