உக்ரைனுக்கு மீண்டும் உதவிகரம் நீட்டிய அமெரிக்கா...
16 புரட்டாசி 2023 சனி 10:47 | பார்வைகள் : 14298
உக்ரைன் ரஷ்ய போர் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றது.
உக்ரைன் நாட்டிற்கான வெடிமருந்து தேவையை தீர்க்க அமெரிக்கா தனது வெடிமருந்து உற்பத்தி அளவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கத்திய நாடு தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக அமெரிக்கா உக்ரைனுக்கு தேவையான போர் விமானங்கள், நிதி உதவிகள், மற்றும் வெடி மருந்துகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கான வெடிமருந்து தேவையை தீர்க்க அமெரிக்கா தனது வெடிமருந்து உற்பத்தி அளவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ராய்ட்டர்ஸிடம் ஆயுத உற்பத்திக்கான அமெரிக்க துணை பாதுகாப்பு அமைச்சர் வில்லியம் லாப்லாண்டே தெரிவித்த தகவலில்,
155 மில்லிமீட்டர் வெடிமருந்துகளின் உற்பத்தியை மாதத்திற்கு 100 ஆயிரம் குண்டுகளாக 2025 ஆம் ஆண்டில் அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அவரின் வழங்கிய தகவல்படி அமெரிக்கா தற்போது வரை ஒவ்வொரு மாதமும் 28 ஆயிரம் வெடிமருந்து குண்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவை கடந்த சில மாதங்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan