உக்ரைன் - ரஷ்ய போர்.... ராணுவ வீரரின் அழுகிய உடல்!
16 புரட்டாசி 2023 சனி 11:00 | பார்வைகள் : 4901
பிரித்தானியாவின் முன்னாள் ராணுவ வீரர் டேனியல் பர்க் என்பவர் உக்ரைனில் மாயமானதாக தேடப்பட்டு வந்தவர்.
இந்த நிலையில் மிக மோசமாக அழுகிய நிலையில் உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
36 வயதான டேனியல் பர்க் கடைசியாக ஒகஸ்டு 11 ஆம் திகதி Zaporizhzia பகுதியில் காணப்பட்டதாக கூறப்பட்டது.
இப்பகுதியானது போர் நடப்பதன் 15 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.
டேனியல் பர்க்கின் உடல் என சந்தேகிக்கப்படும் சடலம் மீட்கப்பட்டாலும், விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்றே உக்ரைன் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த டேனியல் பர்க் முன்னாள் பராட்ரூப்பர் என்றே கூறப்படுகிறது.
மேலும் சர்வதேச நாடுகளில் தன்னார்வலாக போரிடும் பொருட்டு 2022ல் குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
ஜூன் மாதம் கெர்சன் பகுதியில் நடந்த கொடூரமான போரில் கலந்து கொண்டார்.
பின்னர் போர்ப்பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை மீட்கும் பணியில் தமது கவனத்தை திருப்பியிருந்தார்.
ஆனால் தற்போது டேனியல் பர்க் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றே அவரது நண்பர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஜூன் மாதம் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குட்டை ஒன்றில் பிரித்தானிய ராணுவ வீரர் ஜோர்தான் சாட்விக் என்பவரின் சடலம் மீட்கப்பட்டது.
அதே நிலை தற்போது டேனியல் பர்க் என்பவருக்கும் ஏற்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர்.
உடல் மீட்கப்பட்ட பகுதியை பொலிசார் குறிப்பிட மறுத்துள்ளனர்.
ஆனால் Zaporizhzhia மாவட்டம் என உறுதி செய்துள்ளணர்.
மேலும், டி.என்.ஏ சோதனை முன்னெடுத்து, உறுதி செய்யப்படும் எனவும் பொலிசார் டேனியல் பர்க் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.
டேனிய மாயமாகி 5 வாரங்கள் ஆகியுள்ளது.
ஆனால் தற்போது மீட்கப்பட்டுள்ள சடலம் மிக மோசமாக சிதைந்துள்ளது எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.