பதினொரு நாட்களாக பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவர் கைது

16 புரட்டாசி 2023 சனி 15:30 | பார்வைகள் : 12854
பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். பெண் ஒருவரை கடத்தி அவரை 11 நாட்களாக பாலியல் துன்புறுத்தல்மேற்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். Lognes (Seine-et-Marne) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவர் அலறும் சத்தம்கேட்டதை அடுத்து, அருகில் வசிப்பவர்கள் சிலர் காவல்துறையினரை அழைத்துள்ளனர். அதையடுத்து காவல்துறையினர் குறித்த வீட்டுக்குச் சென்று, அங்கு அடைத்துவைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரை மீட்டுள்ளனர்.
46 வயதுடைய குறித்த பெண் 11 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டதாகவும், பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பெண்ணின் உடலில் பலத்த காயம் இருந்ததாகவும், இரத்தக்கசிவு இருந்ததாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அப்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் மேற்கொண்டிருந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் அதே நகரில் உள்ள Emily-Brontë உயர்கல்வி பாடசாலையில்பராமரிப்பாளராக பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1