Paristamil Navigation Paristamil advert login

போதுமான அளவு நித்திரை இல்லை எனில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!

போதுமான அளவு நித்திரை இல்லை எனில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!

16 புரட்டாசி 2023 சனி 15:43 | பார்வைகள் : 3957


உணவு, தண்ணீர் போலவே நமது அடிப்படைத் தேவைகளில் தூக்கமும் ஒன்றாக இருக்கிறது. நாள் முழுவதும் உழைத்து களைத்து இரவில் படுக்க செல்வோருக்கு கூட இரவு தூக்கம் என்பது சிறப்பானதாக இருப்பதில்லை. ஆரோக்கியமற்ற பழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள், மனஅழுத்தம் உள்ளிட்ட பல காரணங்கள் ஒருவரது இரவு தூக்கத்தை பாதிக்கின்றன.

இரவில் நாளொன்றுக்கு குறைந்தது 7 - 8 மணிநேரம் தூங்க வேண்டும் என்று நிபுணர்கள் ஏன் அறிவுறுத்துகிறார்கள் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? ஏனென்றால் தூக்கமின்மை நம் உடலை பலவழிகளில் பாதிக்கிறது.

உடல் ஆரோக்கியத்தோடு குறிப்பாக மூளை ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டை பராமரிப்பதில் நிம்மதியான இரவு தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பலரும் இரவில் தூங்க முக்கியத்துவம் கொடுக்காமல் மொபைலில் பிடித்த படங்கள் அல்லது ஷோக்கள் என்று நள்ளிரவு அல்லது அதிகாலை வரை தூக்கத்தை கெடுத்து கொள்கின்றனர். அவர்களின் இந்த தொடர்ச்சியான பழக்கம் ஒருகட்டத்தில் அவர்களின் நினைவாற்றல் திறனை கணிசமாக பாதிக்கும். தவிர தூக்கமின்மை அறிவாற்றல் செயலிழப்புடன் (cognitive dysfunction) தொடர்புடையது என்கிறது புதிய ஆய்வு ஒன்று.

அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியின் ஜர்னல் ஆஃப் ப்ரோட்டியோம் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய ஆய்வில் ஒரு ப்ரொட்டக்டிவ் ப்ரோட்டீனை (protective protein) ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த protective protein-ன் லெவலானது சரியான தூக்கம் இல்லாததன் காரணமாக குறைகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். நியூரல் ரீஜெனரேஷன், எலும்பு வளர்ச்சி, கேன்சர் மெட்டாஸ்டாஸிஸ் மற்றும் டிஷ்யு ரிப்பேர் (tissue repair) போன்ற பல உயிரியல் நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ள ப்ளியோட்ரோபின் அல்லது PTN என்ற புரதத்தை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். பயாலஜிக்கல் ஈவன்ட்ஸ்களில் தொடர்புடைய ப்ளியோட்ரோபின் (pleiotrophin) அல்லது PTN என்ற ப்ரோட்டீனை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

PTN ப்ரோட்டீனின் லெவல் குறைவாக இருக்கும் போது மூளையின் நினைவாற்றல் மற்றும் learning centre-ன் hippocampus செல்கள் இறக்க தொடங்குவதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். அல்சைமர் மற்றும் பிற நியூரோ ரீஜெனரேட்டிவ் நோய்களில் PTN சம்பந்தப்பட்டிருக்கிறது. நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் போதுமான தூக்கம் ஒருவருக்கு முக்கியம். ஒருவர் போதுமான தூக்கத்தை தொடர்ந்து பெறாவிட்டால் அது ஒருகட்டத்தில் அவரது கவனிக்கும் திறன் மற்றும் நினைவாற்றல் திறனை சீர்குலைக்கிறது.

பலர் வார நாட்களில் இழந்த தூக்கத்தை ஈடுகட்ட வார இறுதி நாட்களில் அதிகம் தூங்குவார்கள். இது இழந்த sleeping hours-ஐ ஈடுகட்ட உதவும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதில் உண்மை இல்லை. American Geriatrics Society இதழில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பரிந்துரைக்கப்பட்ட நேரம் (நாளொன்றுக்கு 7-8 மணிநேரம்) சரியாக தூங்குபவர்களுடன் ஒப்பிட்டால் குறைவாக தூங்குபவர்கள் அல்லது அதிகமாக தூங்குபவர்கள் மனதளவில் 2 வயது மூத்தவர்களாக இருப்பார்கள் என்கிறது.

சிறப்பான இரவு தூக்கத்தை பெற உதவும் வழிகள்:

தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்க செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்தினசரி குறைந்தபட்சம் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்

படுக்கைக்கு செல்லும் முன் மது அருந்துவது அல்லது டீ, காஃபி குடிப்பதை தவிர்க்கவும்.படுத்தவுடன் தூங்க நினைக்காமல் புத்தகங்கள் படிப்பது, பிடித்த இசை கேட்பது போன்ற அமைதியான விஷயங்களில் ஈடுபட்டு இயல்பாக தூக்கத்தை தழுவுங்கள்

தூங்குவதற்கு முன் குறைந்தது 2-3 மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவு சாப்பிட்டு விடுங்கள். படுக்கையில் படுத்து கொண்டே மொபைல், லேப்டாப் போன்ற கேஜெட்ஸ்களை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்