கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தம்

16 புரட்டாசி 2023 சனி 16:07 | பார்வைகள் : 8191
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் ஈடுபட்டுவந்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட வேறு பணிகளுக்கு செல்லவிருப்பதால், குறித்த மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்படுவதாகவும் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
ஒன்பதாம்நாள் அகழ்வாய்வுகளில் மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், தடையப் பொருளாக விடுதலைப்புலிகள் அமைப்பின் இலக்கத் தகடொன்றும், ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் இதுவரை ஒன்பது நாட்கள் இடம்பெற்ற அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் மொத்தமாக 17மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு குறித்த ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகளின் நிறைவில், குறித்த மனிதப் புதைகுழி ட்ரோன் கருவியைப் பயன்படுத்தி காணொளி எடுக்கப்பட்டதுடன், (பிளாஸ்டிக்) விரிப்பு கொண்டு மூடப்பட்டது. குறித்த விரிப்பின் விளிம்புப் பகுதிகளில் மண் இடப்பட்டுள்ளன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1