Paristamil Navigation Paristamil advert login

தேங்காய் தக்காளி சட்னி

தேங்காய் தக்காளி சட்னி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9521


 சட்னி மிகவும் பிரபலமான ஒரு சைடு டிஷ். அதிலும் இட்லி, தோசை போன்றவற்றை எடுத்துக் கொண்டால், அதற்கு நிச்சயம் சட்னி செய்யாமல் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட சட்னியில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. இப்போது அதில் ஒன்றான தேங்காய் சேர்த்து செய்யக்கூடிய தக்காளி சட்னியைப் பார்க்கப் போகிறோம். இது ஒரு அருமையான மற்றும் மிகவும் ஈஸியான ரெசிபி. அதிலும் காலையில் செய்வதற்கு ஏற்ற ரெசிபி. சரி, இப்போது அந்த சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

 
தேவையான பொருட்கள்: 
 
துருவிய தேங்காய் - 1/2 கப் 
தக்காளி - 3 (நறுக்கியது) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
இஞ்சி - 1 இன்ச் (துருவியது) 
பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது) 
வர மிளகாய் - 2-4 
கறிவேப்பிலை - சிறிது 
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். 
 
பின் அதில் இஞ்சி, பூண்டு, வர மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து, தீயை குறைவில் வைத்து வதக்கி, பின் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். 
 
கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றினால், சுவையான தேங்காய் தக்காளி சட்னி ரெடி!!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்