எரிபொருளினை நஷ்டத்தில் விற்பனை செய்ய விநியோகஸ்தர்களிடம் பிரதமர் கோரிக்கை

16 புரட்டாசி 2023 சனி 18:42 | பார்வைகள் : 8762
எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், அதன் விநியோகஸ்தர்களை 'தற்காலிகமாக' இலாபம் இல்லாமலோ அல்லது நஷ்டத்திலோ விற்பனை செய்யுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தக்கோடை காலத்தில் இருந்து பிரான்சில் எரிபொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. உலகசந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பினால் இந்த விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகஉள்ளது.
இந்நிலையில், இந்த விலையேற்றத்தினை கட்டுப்படுத்துவதற்காக எரிபொருட்களில் பெற்றோலினைமாத்திரம் இலாப நோக்கம் கருதாமல், கொள்முதல் விலையிலேயோ அல்லது நஷ்டத்திலேயோ விற்பனைசெய்யுமாறு பிரதமர் Élisabeth Borne கேட்டுக்கொண்டுள்ளார்.
Le Parisien பத்திரிகைக்காக பிரதமர் வழங்கிய செவ்வியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.