Paristamil Navigation Paristamil advert login

Lampedusa தீவினை முற்றுகையிடும் அகதிகள் - இத்தாலி விரைகிறார் உள்துறைஅமைச்சர்

Lampedusa தீவினை முற்றுகையிடும் அகதிகள் - இத்தாலி விரைகிறார் உள்துறைஅமைச்சர்

17 புரட்டாசி 2023 ஞாயிறு 07:34 | பார்வைகள் : 4054


இத்தாலிக்குச் சொந்தமான Lampedusa எனும் சிறிய தீவுக்கு கடந்த ஒரு வாரத்தில் 8,500 அகதிகள்வந்தடைந்துள்ளனர். 

இந்த திடீர் அகதிகள் வருகை ஐரோப்பிய நாடுகளை அதிர்வுக்குள்ளாக்கியுள்ளது. அகதிகள் நிலைப்பாட்டில்இறுக்கம் காட்டி வரும் இத்தாலி, இந்த அகதிகள் தொடர்பில் மெளனம் சாதித்து வருகிறது. ஜனாதிபதிஇம்மானுவல் மக்ரோன் இத்தாலிய பிரதமர் Giorgia Meloni உடன் தொலைபேசியில் இது தொடர்பாகஉரையாடியிருந்தார்.

இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் உள்துறை அமைச்சர் Gérald Darmanin இத்தாலிக்கு பயணிக்கஉள்ளதாக அறிய முடிகிறது. 

இது தொடர்பாக ஜனாதிபதியின் எலிசே மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘ஐரோப்பிய மட்டத்திலானஅகதிகள் குடியேற்ற விதிகளை கடைப்பிடிப்போம் எனவும், மிகவும் வலுவான மற்றும் நீண்டகால தீர்வுகளைஇவ்விடயத்தில் ஏற்படுத்துவோம்!’ என இரு நாடுகளும் இணைந்து முடிவு எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தாலி செல்லும் உள்துறை அமைச்சர், இத்தாலியின் உள்துறை அமைச்சர் Matteo Piantedosi இனைசந்தித்து உரையாட உள்ளார்.

Lampedusa தீவானது இத்தாலிக்குச் சொந்தமான மத்திய தரைக்கடல் தீவாகும். 20 சதுர கிலோமீற்றர்பரப்பளவு கொண்ட இந்த தீவில் மொத்தமாக 6,000 பேர் மாத்திரமே வசிக்கின்றனர். 

சுற்றுலாப்பயணிகளை கவரும் இந்த தீவில் அண்மைய நாட்களில் 196 படகுகளில் 8,500 அகதிகள்வந்தடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்