Paristamil Navigation Paristamil advert login

உலகக்கோப்பை போட்டிகள் - குமார் சங்கக்காரா கணிப்பு

உலகக்கோப்பை போட்டிகள் - குமார் சங்கக்காரா கணிப்பு

17 புரட்டாசி 2023 ஞாயிறு 08:46 | பார்வைகள் : 5699


ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் வெல்லும் என இலங்கை முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரா கண்டித்துள்ளார்.

50 ஓவர் உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 5 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகின்றது.

10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நிபுணர்கள் என பலரும் எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என தங்கள் கருத்தினை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்காரா தனது கணிப்பை தெரிவித்துள்ளார். 

நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டிக்கு பின் நடந்த நிகழ்ச்சியில், நியூசிலாந்தின் சைமன் டவுல் மற்றும் இங்கிலாந்தின் இயான் மோர்கன் ஆகியோருடன் குமார் சங்கக்காரா கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறுகையில், 'இங்கிலாந்தும், இந்தியாவும் முன்னிலை வகிக்கும் என்று நினைக்கிறேன். 

இலங்கை அணி கடைசியாக விளையாடிய போட்டியை பார்த்தேன். 

ஆசியக்கோப்பை முழுவதும் அவர்கள் எப்படி விளையாடினார்கள் என்பதை கவனித்தேன்.

எனவே பிளே ஆஃப் சுற்றில் சவால் நிறைந்தவர்களாக இருப்பார்கள். 

நல்ல நாள் அமைந்தால் இறுதிப்போட்டிக்கு செல்லலாம். 

7 அல்லது 8 அணிகள் உலகக்கோப்பையை வெல்ல முயற்சிக்கின்றன. 

ஆனால் நான் இங்கிலாந்து மற்றும் இந்தியாவை பல வாய்ந்த அணிகள் என்று கூறுவேன்' என தெரிவித்துள்ளார். 

கடைசியாக நடந்த மூன்று உலகக்கோப்பைகளில் போட்டியை நடத்திய அணிகளே (இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. 

வர்த்தக‌ விளம்பரங்கள்