கின்னஸ் சாதனை படைத்த நாய் பரிதாபமாக உயிரிழப்பு!
17 புரட்டாசி 2023 ஞாயிறு 09:10 | பார்வைகள் : 3794
உலகளவில் மிகவும் உயரமான நாய் என்ற உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சியூஸ் நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
சியூஸ் உலகில் உயரமான நாய் என்ற வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
கிரோட் டேன் ரகத்தை சேர்ந்த இந்த நாய்க்கு எலும்பில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக சமீபத்தில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சத்திர சிகிச்சையின் போது சியூஸின் முன்பக்க வலது கால் அகற்றப்பட்டதுடன் சத்திர சிகிச்சைக்கு பின்னர் ஏற்பட்ட நிமோனியா காரணமாக கடந்த 12ம் திகதி அதிகாலையில் உயிரிழந்துள்ளது.
மூன்று வயதான சியூஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் தனது 4 அவது பிறந்த நாளை கொண்டாடவிருந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
அதேவேளை குறித்த நாயின் உரிமையாளரான பிரிட்டானி டேவிஸ் கருத்து தெரிவிக்கையில்,
'உயிருள்ள உயரமான ஆண் நாய்க்கான கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தை பெற்ற எங்கள் அன்பான நாய் ஜீயஸ் காலமானதை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த வருத்தமடைகிறோம்.
ஜீயஸ் செவ்வாய்கிழமை காலை ஊனம் தொடர்பான நிமோனியாவால் இறந்தார். நாங்கள் ஜீயஸுடன் இருந்த நேரத்திற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
அவர் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும் பல மக்களுக்குக் கொண்டுவந்தார்.
அவரை எங்கள் முழு குடும்பமும் ஆழமாக இழக்க நேரிடும். உடன் இருந்த அற்புதமான மனிதர்களின் குழுவிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் டெக்சாஸின் போர்ட்ஃபேர்ட் நகரில் வசிக்கும் தனது உரிமையாளரான பிரிட்டானி டேவிஸ் என்பவரது மடியில் சியூஸ் தனது இறுதி மூச்சை விட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.