பரிஸ் சுவாசிக்கின்றது!!
17 புரட்டாசி 2023 ஞாயிறு 09:28 | பார்வைகள் : 14486
இன்று செப்பெடம்பர் 17ம் திகதி பரிசிற்குள் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
பரிஸ் சுவாசிக்கின்றது எனப்பொருள்படும் «Paris Respire» திட்டத்தின் 9வது தடவையாக இன்று 11 மணி முதல் 18h மணிவரை பரிசிற்குள் மோட்டர் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
ஈருருளி, த்ரோத்தினெத், காலில் சிற்கள் பூட்டி ஓடுதல்(Rollers)), சுறுக்குப் பலகைகள் (Skateboard) மற்றும் பாதசாரிகளிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக ஈருருளிகளை வாடகைக்கு விடும் Velib நிறுவனம் இன்று ஈருருளிகளை இலவசமாகவும் வழங்கி உள்ளது.
இந்தக் குறிப்பிட்ட மணிக்கூற்றிற்குள் யாரும் சட்டத்தை மீறி வாகனங்களில் சென்றால், கடுமையான குற்றப்பணம் அறவிடப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan