வாக்னர் கூலிப்படையை உத்தியோகப்பூர்வமாக தடை விதித்த பிரித்தானியா
17 புரட்டாசி 2023 ஞாயிறு 09:40 | பார்வைகள் : 4282
ரஷ்ய உக்ரைன் போர் ஒரு வருடத்ததை கடந்த நிலையில் இன்னும் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக கருத்தி பிரித்தானியா 15-09-2023 அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது.
கடந்த வாரம் இந்த நடவடிக்கையை அறிவித்த பிறகு, இது உறுப்பினராக இருப்பது அல்லது அதை ஆதரிப்பது சட்டவிரோதமானது என குறிப்பிட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதம் மேற்கு ரஷ்யாவில் விமான விபத்தில் அதன் நிறுவனர் யெவ்ஜெனி பிரிகோஜின் இறந்த பிறகு, வாக்னர் கூலிப்படையின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே கருதப்பட்டது.
இந்த நிலையில் பிரித்தானியா இந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.