கோவிலில் புகைப்படம் எடுப்பவர்களுக்கு அபராதம் விதித்த நாடு
17 புரட்டாசி 2023 ஞாயிறு 10:56 | பார்வைகள் : 4328
நேபாளத்தில் பிரசித்த பெற்ற கோவில் ஒன்றில் புகைப்படம் எடுத்தால் ரூ.2,000 வரை அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம் நேபாளத்தில் பசுபதிநாத் கோவில், பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
பொதுவாகவே நேபாளத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவே காணப்படும்.
வேறு நாடுகளில் இருந்து வருகை தரும் பக்தர்களும் ஏராளம்.
அந்தவகையில் இந்த கோவிலில் புகைப்படம், வீடியோ எடுப்பது ஏற்கனவே தடை செய்யப்பட்டு இருந்தது.
அதையும் மீறி ஒரு சிலர் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆகவே இனி இந்த கோவில் புகைப்படம் எடுத்தால் ரூ.500 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பிரபல டீஜ் பண்டிகை ஆரம்பிக்கவுள்ளது.
பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்றும் புகைப்படம் எடுத்தால் அபராகம் விதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.