McDonald's துரித உணவகங்களில் இன்று உணவின் எடை குறைந்துள்ளது. மக்கள் குற்றச்சாட்டு.
 
                    14 புரட்டாசி 2023 வியாழன் 17:43 | பார்வைகள் : 15051
துரித உணவகங்களில் உணவு உண்பது உடலின் எடை அதிகரிக்கும் என்று மருத்துவம் கூறும் நிலையில், Mc Donald's உணவகத்தில் உணவின் எடை குறைந்துள்ளது என சமூகவலைத்தளங்களில் மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
"விளம்பரங்களில், உணவுப் பொதிகளில் குறிப்பிட்ட நிறையின் அளவு உள்ளேயுள்ள உணவில் இல்லை குறைவாகவே உள்ளது" என நுகர்வோர் குற்றம் சுமத்தி உள்ளனர்.
உதாரணமாக Big Tasty உணவில் இறைச்சியின் நிறை 354 கிராம், 868 கலோரி என பொதியில் அச்சிடப்பட்டுள்ளது. இது அன்றைய பதிப்பு, உண்மையில் இன்று Big Tasty உணவின் நிறை 225 கிராம். இது அன்றைய நிறையோடு ஒப்பிடுகையில் 37% குறைவாகவே உள்ளது. அதேபோல் Big Mac உணவைப் பொறுத்தவரை சுட்டிக்காட்டப்பட நிறைக்கும் இன்றைய நிறைக்கும் இடையில் 8.7% வீதம் வித்தியாசம் உள்ளது. உண்மையில் அன்று Big Mac உணவில் உள்ள இறைச்சியின் நிறை 45 கிராம் ஆனால் இன்று Mc Donald's உணவகங்களில் விற்கப்படும் Big Mac உணவின் நிறை 33 கிராம். என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டுக்களை Mc Donald's உணவு நிறுவனம் மறுத்துள்ளது. தாங்கள் இன்றைய விலையேற்றத்துக்கு அமைய வாடிக்கையாளர்களின் நிதிநிலை அறிந்தே விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.
        KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan