உயிரச்சுறுத்தல் - 5000 காவற்துறையினர் - 1000 பாதுகாப்புப் படையினர் - உள்துறை அமைச்சர்!!

14 புரட்டாசி 2023 வியாழன் 18:25 | பார்வைகள் : 10538
மார்செய் நகரிற்கு வரவிருக்கும் போப்பாண்டவரிற்கு உயிரச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற உள்ளகப் புலனாய்வுத் துறையினரின் எச்சரிக்கையைக் கருத்திற்கொண்டு, உள்துறை அமைச்சகம் பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகின்றது.
இதன் முதற்கட்டமாக 5.00 காவற்துறையினர் மற்றும் ஜோந்தாரமினர், 1000 பாதுகாப்புப் பிரிவினரும் (agents de sécurité) பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனன் தெரிவித்துள்ளார்.
மார்செய் நகர் தொடர்பான, தொடர்ச்சியான புலனாய்வின் அடிப்டையில் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி முன்னமே தெரிவிப்பது, தாக்குதல் நடாத்த எத்தனிப்பவர்களை தடுப்பாதற்கான யுத்தியாகும்.