பாரிசில் JO 24. அவசரமாக வெளியேற்றப்படும் வெளிநாட்டவர்கள்.

14 புரட்டாசி 2023 வியாழன் 20:15 | பார்வைகள் : 12256
அடுத்த ஆண்டு பாரிசில் JO24 ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், பாரிசில் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தலைநகர் parisன் வீதியோரங்களில், பூங்காக்களிலும், மற்றும் பொது இடங்களிலும் கூடாரம் அமைத்து தங்கியிருக்கும் வெளிநாட்டு அகதிகள், பாரிசில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக Bordeaux, Toulouse போன்ற பாரிசில் இருந்து மிகத் தூரமான மாவட்டங்களுக்கே அவர்கள் கொண்டு செல்லப் படுகிறார்கள். காரணம் பரிசுக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யும் போது குறித்த அகதிகள் மீண்டும் பாரிஸ் நகருக்கே வந்த விடுகிறார்கள் என காவல்துறை தெரிவிக்கிறது.
ஆனால் பிரான்ஸ் சட்டத்தின்படி "பிரான்சில் வாழும் ஒருவர் இந்த நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் வாழும் உரிமை உண்டு " என அகதிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் வாதாடி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 1600 வீதியோர வெளிநாட்டு அகதிகள் சுமார் 1 600 பேர் பரிசில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். என தகவல்கள் தெரிவிக்கின்றன.