இலங்கையில் குவியும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

15 புரட்டாசி 2023 வெள்ளி 06:06 | பார்வைகள் : 8175
இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 46,000க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் முதலாம் திகதி முதல் 12ம் திகதி வரையில் 46 ஆயிரத்து 308 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர்.
இதன்படி, இந்த வருடத்தில் இதுவரையில் நாட்டை வந்தடைந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 950,626 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மாதத்தில் சுமார் 120,201 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கில் இதுவரையில் 39 சதவீதத்தை இலங்கை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.