பரிஸ் : TGV தொடருந்தில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி
15 புரட்டாசி 2023 வெள்ளி 07:25 | பார்வைகள் : 13691
TGV தொடருந்தில் இருந்து சுடுவதற்கு தயாரான நிலையில் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் Montparnasse தொடருந்து நிலையத்தை வந்தடைந்த தொடருந்தில் இருந்தே இந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. ஐந்து சன்னங்கள் நிரப்பப்பட்டு Smith & Wesson நிறுவனத்தைச் சேர்ந்த 32 mm கலிபர் துப்பாக்கி ஒன்று பை ஒன்றில் சுற்றப்பட்டு தொடருந்தின் இருக்கை ஒன்றில் கீழ் இருந்துள்ளது.
துப்பரவு பணியாளர்கள் இதனை கண்டறிந்து, பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan