வேற்றுகிரகவாசிகள் தொ்ர்பில் வெளியாகிய சர்ச்சை - நாசா கருத்து!
15 புரட்டாசி 2023 வெள்ளி 08:32 | பார்வைகள் : 3721
வானில் பறக்கும் தட்டுக்கள் தொடர்பான நீண்ட கால ஆய்வு குறித்த தகவல்களை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' பகிர்ந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக வேற்றுகிரகவாசிகள் குறித்த கதைகள், மக்கள் மத்தியில் பாரியளவில் உலாவி வருகிறது.
இவ்வாறான நிலையில் 13-09-2023 இல்மெக்சிகோ நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.
நீண்ட காலமாக வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆய்வை அமெரிக்கா இரகசியமாக மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு பறக்கும் தட்டுக்கள், அல்லது வேற்றுகிரக வாசிகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் உலாவி வருகின்றன.
சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆய்வின் முடிவுகளை நாசா அறிவிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள எலான் மஸ்கின் சேடிலைட்ஸ் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.