சீனாவில் பயங்கர விபத்து! 6 பேர் பலி!
.jpeg)
15 புரட்டாசி 2023 வெள்ளி 10:42 | பார்வைகள் : 9006
சீனாவில் ராட்சத டவர் கிரேன் சரிந்து விழுந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சீனா - ஜியான்யாங் மாகாணத்தில் உள்ள துவோ ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
வழக்கம்போல் நேற்றைய தினம் இந்த பணி நடைபெற்று கொண்டிருந்தவேளை ராட்சத டவர் கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.
இதில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025