Paristamil Navigation Paristamil advert login

மழையில் வடை சாப்பிடுங்க பாஸ்.. லிவருக்கு நல்லதாம்!

மழையில் வடை சாப்பிடுங்க பாஸ்.. லிவருக்கு நல்லதாம்!

15 புரட்டாசி 2023 வெள்ளி 11:05 | பார்வைகள் : 4088


ராமு: ஏம்மா.. பிரேமா.. மழைக்கு சுடச் சுட நல்ல காரமா வடை போடேன் 

பிரேமா: உங்க மண்டையிலதான் ரெண்டு போடனும், அதெல்லாம் எண்ணைங்க, வேண்டாம்.

ராமு: எது.. எண்ணை நல்லது இல்லையா. அப்போ தண்ணீர் குடிச்சா மட்டும் நல்லதா? 

பிரேமா: இது என்ன கேனத்தனமா ஒரு கேள்வி. தண்ணீர் ஈஸியா ஜீரணமாகும், நல்லதுதான். 

ராமு : (நம்பிக்கையோடு): இப்போ, தண்ணீர்ல எண்ணெய் சேர்ந்தா என்னாகுது?

பிரேமா: தண்ணீர்ல எண்ணை மிதக்கும். 

ராமு: அப்போ.. எண்ணெய் தண்ணீரை விட லகுவான பொருள்தான.

பிரேமா (குழப்பத்தோடு): அப்படித்தாங்க தெரியுது 

ராமு: அப்போ அந்த எண்ணையில மிதக்குற வடை எவ்வளவு லகுவானது. ஜீரணத்துக்கு ஈஸியாதான இருக்கும். இது தெரியாம பேசுறியே.. போ, போ. போய் வடை சட்டியை எடுத்து அடுப்புல வை டார்லிங். (ராமு மைண்ட் வாய்ஸ்- அப்பாடா, எப்படியோ வாய்லயே வடை சுட்டு, வடைக்கு ரெடி பண்ணியாச்சு)

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்