Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பல கோடி ரூபாய் பெறுமதியான நகைகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பல கோடி ரூபாய் பெறுமதியான நகைகள்

15 புரட்டாசி 2023 வெள்ளி 11:56 | பார்வைகள் : 7494


பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாக்க விமானநிலையத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர்.

குறித்த பெண்களிடமிருந்து 3 கோடியே  72 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களில் ஒருவர் 26 வயதான இந்தியப் பிரஜையாவார். மற்றைய பெண் கொழும்பு ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இலங்கை பிரஜையாவார்.

கைதுசெய்யப்பட்ட இரண்டு பெண்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்