iPhone 12 விற்பனைத் தடை : பணிந்தது ஆப்பிள் நிறுவனம்
15 புரட்டாசி 2023 வெள்ளி 12:36 | பார்வைகள் : 6235
பிரான்சில் iPhone 12 தொலைபேசிகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தடையினை நீக்கி மீண்டும் விரைவில் அவை விற்பனைக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SAR Value என அழைக்கப்படும் மின்காந்த அதிர்வுகளை அதிகளவில் வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டே இந்த தடை மேற்படி தொலைபேசிகளுக்கு விடுக்கப்பட்டிருந்தது. இந்த பிரச்சினையை ஒரு Software மேம்படுத்தலூடாக சீர் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த ஆப்பிள் நிறுவனம், தற்போது Software மேம்படுத்தலை பிரான்சின் கோரிக்கைக்கு ஏற்றால் போல் சீர்செய்ய உறுதியளித்துள்ளது.
Software மேம்படுத்தல் வெளியிடப்படும் திகதி அறிவிக்கப்படவில்லை என்றபோதும், அதற்கான தயார்ப்படுத்தலை ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தலை அடுத்து பிரான்சில் ஐபோன் 12 தொலைபேசிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.