பிரான்சில் antibiotiques உட்பட பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு. மருந்தகங்கள்.
15 புரட்டாசி 2023 வெள்ளி 15:21 | பார்வைகள் : 6257
பிரான்சில் கடந்த சில காலங்களாக பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக நுண்ணுயிர் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், (antibiotiques) நீரழிவு நோய்க்கான மருந்துகள் (antidiabétiques) மற்றும் வலிநிவாரணி மருந்துகள் (anti-douleurs) என தட்டுப்பாடான மருந்துகளின் பட்டியல் நீண்டு செல்கிறது.
ஒரு மருந்தகத்தின் மேலாளர் குறிப்பிடும் போது, "ஐந்தில் நான்கு நோயாளர்கள மருந்துகள் வாங்க வரும் போது ஒரு நிவாரண மருந்து குறைந்தது, கடந்த மாதங்களில். இன்று இந்த நிலை அதிகரித்து செல்கிறது " என தெரிவிக்கின்றார்.
இந்த நிலைக்கு காரணம் தட்டுப்பாடு நிலவும் மருந்துகளில் 70% வீதமான மருந்துகள் நீண்டகாலம் தயாரிக்கப்படும் மருந்துகள். அவை பழைய விலை நிர்ணயத்தில் உள்ளது, புதிய மருந்துகள் புதிய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே ஆய்வகங்கள் தங்கள் தயாரிப்பில் புதிய மருந்துகளை தயாரிப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது