Paristamil Navigation Paristamil advert login

கவுதமி பவன் கல்யாணுக்கு அம்மாவாகிறாரா ?

கவுதமி பவன் கல்யாணுக்கு அம்மாவாகிறாரா ?

15 புரட்டாசி 2023 வெள்ளி 16:14 | பார்வைகள் : 6222


நடிகை கவுதமி 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதன்பிறகு நடிகர் கமல்ஹாசன் உடன் வாழ்ந்து வந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர். தமிழில் கடைசியாக 'பாபநாசம்' படத்திற்கு பிறகு கவுதமி இன்னும் எந்ந தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது அவர் பா.ஜ., கட்சியில் உள்ளார். இந்நிலையில் ஒரு தெலுங்கு படத்தில் கவுதமி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண், ஸ்ரீலீலா நடித்து வரும் திரைப்படம் 'உஸ்தாத் பகத் சிங்' . இதில் பவன் கல்யாணுக்கு அம்மாவாக கவுதமி நடிப்பதாக கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அடுத்த வருடம் இத்திரைப்படம் திரைக்கு வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்