வாழைப்பழ கேக்
15 புரட்டாசி 2023 வெள்ளி 16:18 | பார்வைகள் : 3901
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையான வாழைப்பழ கேக் ரெசிபி எப்படி எளிதாக சமைக்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம்- 3 அரைத்துக்கொள்ள வேண்டும்
மைதா- 2 கப்
சர்க்கரை- 2 கப்
சிட்ரிக் ஆசிட்- கால் டீஸ்பூன்
உப்பு- ஒரு சிட்டிகை
வெண்ணெய் - 125 கிராம்
வெனிலா எசன்ஸ் சில துளிகள்
செய்முறை:
ஒரு அடி கனமான பாத்திரத்தில் அரைத்து கூழாக்கிய வாழைப்பழம், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
அந்த கலவையுடன் மைதா மாவினை சலித்து சிறிது சிறிதாக கெட்டியில்லாமல் கலந்துகொள்ள வேண்டும். கெட்டியாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம்.
அதன்பிறகு ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடத்திற்கு ஃப்ரீஹீட் செய்ய வேண்டும்.
அதன்பிறகு வாழைப்பழ கேக் கலவையை கேக் மோல்டில் ஊற்றி அதனுள் வைக்க வேண்டும். 25 நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும். 25 நிமிடங்கள் கழித்து திறந்து பார்க்க வேண்டும். சுவையான வாழைப்பழ கேக் தயார். சூடு ஆறியதும் கேக்கை வெட்டி பரிமாறலாம்.