Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் நயன்தாரா, யோகிபாபு கூட்டணியில் புதிய படம்!

மீண்டும் நயன்தாரா, யோகிபாபு கூட்டணியில் புதிய படம்!

18 புரட்டாசி 2023 திங்கள் 15:35 | பார்வைகள் : 2714


நயன்தாரா கடைசியாக ஷாருக்கான் உடன் நடித்த ஜவான் திரைப்படம் இந்திய அளவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 800 கோடியை அதிகமாக தாண்டி வசூலித்துள்ளது.

தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்த நயன்தாரா தற்போது பாலிவுட்டிலும் அழுத்தமாக கால் பதித்துள்ளார். இனி அவருக்கு பாலிவுட் வாய்ப்புகள் குவியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ‘மண்ணாங்கட்டி(Since 1960)’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதலிக்கும் கதாபாத்திரத்தில் கலகலப்பாக நடித்திருந்தார் யோகி பாபு. அதே மாதிரி ஒரு முக்கியமான கதாபாத்திரம் இந்தப் படத்தில் அவருக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். லக்ஷ்மன் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது அதில் பழைய செப்பு நாணயங்கள் ஓட்டை காசுகள் காணப்படுகின்றன. மேலும் இப்போதைய ரூபாய் தாள்களும் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்