நெய் பிஸ்கெட்
18 புரட்டாசி 2023 திங்கள் 15:43 | பார்வைகள் : 3397
பேக்கரிகளிலும், டீக்கடைகளிலும் விற்கும் நெய் பிஸ்கட் என்றால் எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும். அந்த நெய் பிஸ்கட்டை நம் வீட்டிலேயே கூட செய்யலாம். ஓவன் தேவையே இல்லை. சுலபமாக, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, பிஸ்கட் எப்படி தயாரிப்பது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகிறோம். எந்த ஒரு பிரிசர்வேட்டிங்கும் சேர்க்காமல், ஆரோக்கியமான இந்த பிஸ்கட்டை உங்கள் கையாலேயே செய்து, உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்! கட்டாயம் ஆரோக்கியமானதாக இருக்கும். நெய் பிஸ்கட் வீட்டிலேயே எப்படி செய்வது? பார்த்து விடலாமா!
தேவையான பொருட்கள்
நெய்-200 கிராம்
மைதா-400 கிராம்
சர்க்கரை-200 கிராம்
பேக்கிங் சோடா- ஒரு சிட்டிகை
பேக்கிங் பவுடர்- அரை டீஸ்பூன்
ரீபைண்ட் ஆயில்- ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதனை கீரிமியான அளவுக்கு நன்றாக் பீட் செய்து கொள்ள வேண்டும். அதனுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து மீண்டும் கிரீம் அளவுக்கு பீட் செய்துகொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மைதா மற்றும் ஒரு சிட்டிகை உப்பு, வாசனை இல்லாத ரீபைண்ட் ஆயில், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து அதனை நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து அதனை ஒரு அரைமணிநேரத்திற்கு மூடி போட்டு தனியே எடுத்து வைக்க வேண்டும்.
அரைமணிநேரத்திற்கு பிறகு அந்த மாவினை எடுத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்து மறுபடியும் பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை உருண்டைகளாக உருட்டி தட்டி பிஸ்கெட் வடிவத்திற்கு வட்டமாக தட்டி வைக்க வேண்டும்.
அதன்பிறகு அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். ஃப்ரீஹீட் ஆனதும் அதில் பிஸ்கெட்டுகளை வைத்து 25 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான நெய் பிஸ்கெட் தயார்.
பிஸ்கட்டை அடுப்பில் இருந்து எடுத்ததும், சூடாக இருக்கும் போது, சாஃப்ட்டாக தான் இருக்கும். பிஸ்கட் நன்றாக ஆறிய பின்பு சுவைத்துப் பாருங்கள். கடைகளில் வாங்கிய சுவையை விட, உங்கள் கைகளால் நீங்களே செய்த இந்த பிஸ்கட்டின் ருசி அதிகமாகத்தான் இருக்கும்.