Paristamil Navigation Paristamil advert login

காளான் பிரியாணி

 காளான் பிரியாணி

19 புரட்டாசி 2023 செவ்வாய் 08:25 | பார்வைகள் : 3303


காளான் பிரியாணி சுவையான மற்றும் விரைவில் செய்யக்கூடிய சுலபமான உணவு வகை.   இதனை  மதிய உணவு அல்லது இரவு நேர உணவாக தாராளமாக செய்யலாம்.   30 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யக் கூடிய உணவை என்பதால் இது லஞ்ச் பாக்ஸ்க்கு செய்ய ஏற்றதாக இருக்கும். காளான் பிரியாணி வெங்காய பச்சடி,  முட்டை தொக்கு,  சிக்கன் அல்லது சைவ கிரேவி வகைகளுடன் சுவையாக இருக்கும். 

தேவையான பொருட்கள்

மசாலா பொருட்கள்

பிரிஞ்சி இலை – 2
பட்டை – 1
நட்சத்திர சோம்பு – 1
ஏலக்காய் – 4
லவங்கம் – 5
பொடித்த ஜாதிக்காய் – 1   சிட்டிகை
கல்பாசி – 1   சிட்டிகை
இதர பொருட்கள் 

பாஸ்மதி அரிசி – 1 கப் – 200g
காளான் – 300g 
சமையல் எண்ணெய் – 3  தேக்கரண்டி
நெய் – 1  மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
புதினா –  சிறிது
கொத்தமல்லி –  சிறிதளவு
பெரிய வெங்காயம் – 2 – 250g
இஞ்சி பூண்டு விழுது – 1  தேக்கரண்டி
தக்காளி – 1
உப்பு –  தேவையான அளவு
மஞ்சள் – ¼  தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – ½   தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் – 1  தேக்கரண்டி

செய்முறை

ஒரு பவுலில் 1 கப் பாஸ்மதி அரிசியை சேர்த்து, ஒரு முறை கழுவிய பின்னர் 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.

ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து கொள்ளவும்.

பின்னர் இரண்டு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்னர் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.

இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போக வதங்கியபின் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும். 

பின்னர் 3 பச்சை மிளகாய்,  சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினா ஆகியவற்றை நறுக்கி சேர்த்து கொள்ளவும். புதினா மற்றும் கொத்தமல்லி சுருண்டு வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.

அதனுடன் ஒரு தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.

அதனுடன் தேவையான அளவு உப்பு, ¼  தேக்கரண்டி  மஞ்சள் தூள், ½  தேக்கரண்டி மிளகாய்த்தூள், 1  தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். மிளகாய் தூளில் பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

பின்னர் காளானை சுத்தம் செய்து ¼  இன்ச் முத்தத்திற்கு வெட்டிக் கொள்ளவும். மசாலா கலவையுடன் காளானை சேர்த்து வதக்கவும். அதனை மூடி வைத்து குறைவான தீயில் வைத்து வேக வைக்கவும்.

பின்னர் 1 ¼  தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும், தண்ணீர் கொதித்த பின்னர் பாஸ்மதி அரிசியை சேர்த்துக் கொள்ளவும்.

இதனை மூடி வைத்து குறைவான தீயில் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

வெந்த பின்னர் ஒரு கரண்டி கொண்டு மெதுவாக கிளறவும் சுவையான காளான் பிரியாணி தயார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்