Saint-Denis : பாடசாலைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் - மாணவர்கள் வெளியேற்றம் - மோப்ப நாய்களுடன் காவல்துறையினர்
19 புரட்டாசி 2023 செவ்வாய் 09:26 | பார்வைகள் : 5980
Saint-Denis நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு சற்று முன்னர் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், அவசரமாக மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
lycée Paul Eluard உயர்கல்வி பாடசாலைக்கே இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு அகற்றும் வீரர்கள், காவல்துறையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மொத்தமாக 1,800 மாணவர்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மோப்ப நாய்களுடன் களமிறங்கிய காவல்துறையினர் பாடசாலை வளாகம் முழுவதுமாக தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலை நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் ஊடாக காலை 10 மணி அளவில் இந்த வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், இந்த மின்னஞ்சல் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.